இப்படியும் ஒரு உயில்!

“எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்!

பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டேன். வேறெந்த சொத்தும் எனக்கில்லை!

எனது வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் பொது மக்கள் நூலகத்திற்கோ நமது கட்சிக்கோ கொடுத்துவிடுங்கள்.

எனக்கென இருப்பது நான்கு செட் சட்டைகளும், வேட்டிகளள் மட்டுமே! அவற்றையும் தேவைப்படும் விவசாய கூலித் தொழிலாளருக்கு கொடுத்து விடுங்கள்!

புதிய சமூக மாற்றத்துக்காக என் சக்தி முழுவதையும் செலவிட்டு பயனுள்ள வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன்!

இளைஞர்கள் நான் பிடித்த செங்கொடியைப் பிடித்து மேலும் முன்னேறிச் செல்வார்கள்!

மனநிறைவுடன் என் அன்பிற்குரிய தோழர்களிடமிருந்து விடை பெறுகிறேன்”

தோழர் C.ராஜேஸ்வர ராவால் தெலுங்கில் எழுதப்பட்ட இந்த கடைசி கடிதம் அவரது மறைவன்று பத்திரிகைகளில் வெளியாகி ஆந்திர மக்கள் கண்ணீர் சிந்தி கதறியழுதார்கள்!

நன்றி: கணேசன் முகநூல் பதிவு

You might also like