த்ரில்லர் படங்களுக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு!

 – தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு

மகேஷ் சி.பி. தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இது ஓடிடி-க்களின் காலம். ஓடிடிகளில் படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதனால்தான் புது புது ஓடிடி நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி வரும் ஓடிடி நிறுவனங்கள் ‘கிரிமினல்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம், மக்களும் இதுபோன்ற படங்களை விரும்பிப் பார்ப்பதுதான்.

அந்த வகையில், ‘கிரிமினல்’ படத்தை வாங்க பல ஓடிடி நிறுவனங்கள் முன்வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை படத்தின் டிரைலர் நிரூபித்துள்ளது.

பொதுவாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய படங்களைத் தான் வாங்குகிறார்கள், சிறிய படங்களை வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் ஓடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களைத் தான்.

நல்ல கதையாக இருந்தால், நடிகர்கள் யார்? என்பதை ஓடிடி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற படமா? என்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள்.

‘கிரிமினல்’ படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. அறிமுக இசையமைப்பாளரின் பணி போல் இல்லை. பல படங்களுக்கு இசையமைத்த அனுபவம் உள்ள இசையமைப்பாளரின் பணிபோல் இருக்கிறது.

ஓடிடிக்கான மிகச் சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் ஆறுமுகம், “இது எனக்கு முதல் படம். அதனால், என்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருக்கிறேன். பல கட்டங்களில் படத்தை மெருகேற்றினோம்.

படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான மகேஷ், நல்ல உத்துழைப்பு கொடுத்ததோடு படம் சிறப்பாக வருவதற்கு மிகக் கடுமையாக உழைத்தார்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் டிரைலர் குறுந்தகடை வெளியிட ‘கிரிமினல்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கிரிமினல்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பா.மகிழ்மதி

You might also like