– சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதகரித்துள்ளது.
அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது.
மேலும் தற்போது அண்ணா பல்கலைக் கழகத்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து குழுவாக கொரோனா பரவல் என்பது இந்த 5 மண்டலங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 93.24 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும் 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.