ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’!

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா கூட்டணி வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது.

இவர்கள் கூட்டணியில் வெளியான இது சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன. மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ளனர்.

ஏஆர்கே. சரவணன் இயக்கும் “வீரன்” படத்தின் படப்பிடிப்பு  இன்று காலை (மே 25) பொள்ளாச்சியில் எளிமையாகத் தொடங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர். ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கிறார். முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.

You might also like