மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!

 – உச்சநீதிமன்றம் அதிரடி

சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும்,

அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற மத்திய அரசை போலவே மாநில அரசுக்கும், அதன் சட்டத்துறைக்கும் சம உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்பை இன்று வழங்கியுள்ளது.

கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் அந்த வரியை ரத்து செய்து உத்தரவிட்டது.

மாநில சட்டமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

மத்திய மாநில அரசுகள் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான வாதங்களையும், விசாரணைகளையும் ஆராய்ந்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, “வரிவிதிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரத்தியேகமான அதிகாரங்கள் சட்டபூர்வமாக வழங்கப்பட்டவையாகும். மேலும், அரசியல் சாசன பிரிவு 246/Aவின் படி வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு சம அதிகாரம் உள்ளது.

அது மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிறது.

மேலும், ஜனநாயகத்திலும், கூட்டாட்சி தத்துவத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என  அறிவுறுத்தியுள்ளது.

You might also like