கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார்.
அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில், சுஷில் சந்திராவின் பதவிகாலம் வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுநாள் வரை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்தியாவின் 25-வது தலைமைத் தேர்தல் ஆணையராக வரும் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.