காலத்தின் மதிப்பறிந்தால் வாழ்வின் மதிப்பும் தெரியும்!

– நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

  • ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.
  • காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான் வாழ்வின் மதிப்பு தெரியும்.
  • கோபம் விஷம் குடிப்பதை போன்றது; ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது.
  • இந்த உலகை மாற்றுவதற்காக உன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி ஒன்றே.
  • நாட்டின் குடிமக்கள் கல்வி அறிவு பெறாத வரை எந்த நாடும் உண்மையில் மேம்பாடு அடைய முடியாது.
  • புத்தக வாசிப்பிற்கு அனுமதித்தால் போதும் சிறையும் சுதந்திரமான இடம்தான்.
  • விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை.
  • எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரே தலைவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல.
  • எனது வெற்றிகள் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள்; எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள்.
  • நான் தோற்பதே இல்லை. ஒன்று வெற்றி அடைகிறேன் அல்லது கற்றுக் கொள்கிறேன்.
You might also like