வறுமையால் மக்கள் நலன் பலியாச்சு!

நினைவில் நிற்கும் வரிகள்:

கொடுமை புரிவதே தொழிலாச்சு – உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு
வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு – எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு

சோகச் சுழலிலே – ஏழைச்
சருகுகள் சுற்றுதடா
கண்ணீர் கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்

ஆசைக்கு நீதி இரை யாகுதடா – அன்பை
அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா

(சோகச்…)

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்

பாதை தவறாத பண்பு உள்ளம்
இருந்த நிலைமறந்து
இழுக்கான குற்றம்தன்னை

புரிந்திடலா மென்றும் துணியுதடா – நேர்மை
பொல்லா சூழ்நிலையால் வளையுதடா.

(சோகச்…)

– 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த ‘பாண்டித் தேவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இசை: சி.என்.பாண்டுரங்கம், மீனாட்சி சுப்பிரமணியம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்,
கதை, இயக்கம்: கே.சுப்பிரமணியம்.

You might also like