மே-5: மணாவின் 10 நூல்கள் வெளியீட்டு விழா!

பத்திரிகையாளர் மணாவின் நான்கு புதிய நூல்களும், ஆறு புதிய பதிப்பு நூல்களும் வரும் மே-5 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கில் வெளியிடப்பட இருக்கின்றன.

‘தமிழர்கள் எதில் குறைந்து போய்விட்டார்கள்?’, ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ என்ற தலைப்பிலான மணாவில் புதிய நூல்களை வெளியிடுகிறது பரிதி பதிப்பகம்.

அதோடு ‘முள்ளிவாய்க்கால் – குருதி தோய்ந்த குறிப்புகள்’, ‘முள்ளி வாய்க்கால் – ஓவிய நிழல்கள்’, ‘உயிருக்கு நேர்’, ‘ஆளுமைகள் – சந்திப்புகள் – உரையாடல்கள்’, ’ஜெயகாந்தன் – ஒரு மனிதன், ஒரு உலகம்’, சோ-வின் ‘ஒசாமஅசா’ விரிவாக்கப்பட்ட பதிப்பு என்று ஆறு நூல்களும் பரிதி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட இருக்கின்றன.

டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் மணாவின் ‘ஊடகம் யாருக்கானது?’, ‘சாதி என்பது கொடூர யதார்த்தம்’ என்கிற தலைப்பிலான தொ.பரமசிவனின் நேர்காணலும், கட்டுரைகளும் அடங்கிய இரண்டு நூல்களும் வெளியாக இருக்கின்றன.

முனைவர் குமார் ராஜேந்திரன் தலைமையில் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்க, முனைவர் அபிதா சபாபதி தொகுத்து வழங்க இருக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான  தொல்.திருமாவளவனும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் துணைச் செயலாளரான சி.மகேந்திரனும் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டும், பெற்றும் பேச இருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊடகவியலாளர்கள்.

ஹிந்து ஆங்கிலப் பதிப்பின் தலைமைச் செய்தியாளரான கோலப்பன், சன் குழுமச் செய்தி ஆசிரியரான குணசேகரன், புதிய தலைமுறை செய்திக் குழுமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், நியூஸ்-7 தொலைக்காட்சி செய்தி ஆசிரியரான தியாகச் செம்மல்,

பத்திரிகையாளர்களான கல்கி ப்ரியன், சமஸ், சுந்தரபுத்தன், சாவித்ரி கண்ணன், வழக்கறிஞர் சுமதி, இயக்குநர் ராசி.அழகப்பன், சத்தியம் தொலைக்காட்சி செய்திக் குழுமத்தைச் சேர்ந்த அரவிந்தாக்சன், ஊடவியலாளர் ஜீவசகாப்தன், ஓவியர் பாலசுப்பிரமணியம், சித்ரா பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

பதிப்பாளர்களான வேடியப்பன், இளம்பரிதி ஆகியோர் நன்றி கூற இருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

*

You might also like