ஆண்டுக்கொருமுறை ஒரு வாரம் மட்டுமே பூத்துக் குலுங்கும் பெல்ஜியத்தின் நீலப் பூக்கள் வனம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. ஒரு வருடத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பூப்பது தான் இந்த நீல வனத்தின் தனிச்சிறப்பு.
தலைநகர் பிரசல்சிக்கு (Brussels) அருகில் இருக்கும் அந்த நீல வனம், பெயருக்கேற்றாற்போல் நீலப் பூக்களால் கம்பளம் விரித்தது போன்று காட்சியளிக்கிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியான பூக்களைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து நிறையப் பேர் அங்கு வந்து செல்கின்றனர்.
பனி சூழ்ந்த காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் பூக்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி.
அதற்காகவே சூரியக் கதிர்கள் வருவதற்கு முன்பே அங்கு வந்து பலர் காத்திருந்து ரசிக்கினறனர். அதிலும் கையில் ஒரு புகைப்படக் கருவி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இயற்கைப் பிரியர்கள் அந்தக் காட்சியைக் கருவிக்குள் அடக்கத் தவமிருக்கின்றனர். அங்கு சென்றால் ஒரு கற்பனை உலகத்தில் கால் பதித்தது போன்ற உணர்வுதான் வரும் என்பவர்கள் அதிகம்.
பூக்கள் இதழ்விரித்துச் சிரிக்கும் இந்த ஏழு (2022, ஏப்ரல் – 21 முதல் 28 வரை) நாட்களை விட்டால் இனி அடுத்த ஆண்டு வரும் அந்த ஏழு நாட்களுக்காகக் காத்திருக்க வேண்டும்.