புதுமைப்பித்தன்: காலத்தை வென்ற கதைக்காரன்!

‘சிறுகதை மன்னன்’ என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் – 25, 1906)!

“நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி பெறுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்போதும் கிடந்து கொண்டே இருக்கும்.

அந்தக் கிடங்கில் இருந்து எப்போதும் நான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இவற்றை விவரப் பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதியளிப்பேன்.

ஆனால் ஒன்று. எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனதில் உறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் அந்தக் கதைகள் யாவும் இதைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை.”

– புதுமைப்பித்தன்

– நன்றி: செந்தில் ஜெகநாதன் முகநூல் பதிவு.

You might also like