பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மீண்டும் வெற்றி!

பிரான்ஸ் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்மையில் நடந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மரின் லீ பென்னுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் எல்.ஆர்.இ.எம். எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்ட இமானுவேல் மேக்ரான், 58 சதவீத வாக்குகளைப் பெற்றார். முக்கிய எதிர்க்கட்சியான நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 42 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேக்ரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ், ஜெர்மன், கனடா, இத்தாலி, ஸ்பெயின் நாட்டுத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜோ பைடன் தனது வாழ்த்துச் செய்தியில் உக்ரைன் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளில் மேக்ரான் முழு துணையாக இருப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “பிரான்சின் அதிபராக எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். இம்மானுவேல் உடன் இணைந்து இந்தியா – பிரான்ஸ் உறவை வலுப்படுத்தும் வகையில் பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.

You might also like