இப்படியும் ஒரு பிரதமர்…!

மொரார்ஜி தேசாய், பத்து ஆண்டுகள் இந்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தவர்.

நேரு மறைந்தபோதும், சாஸ்திரி மறைந்தபோதும், இரண்டு முறை இந்தியத் தலைமை அமைச்சர் பொறுப்புக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1977-ல், தமது 82-ம் அகவையில், இந்தியத் தலைமை அமைச்சர் ஆனார். அதுவரை இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 5000, 10000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தார்.

அவர் தலைமை அமைச்சராக இல்லாதபொழுது, இங்கிலாந்து நாட்டுக்கு வருமாறு அழைத்தார்கள்.

“உங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்றால், தடுப்பு ஊசி குத்த வேண்டும்.
நான் காந்தியின் தொண்டன். எந்தத் தடுப்பு ஊசியும் குத்திக்கொள்ள மாட்டேன்” என்றார்.

“சரி. நீங்கள் வரலாம்” என அவர்கள் மீண்டும் அழைத்தபிறகு, சென்று வந்தார்.

மும்பை மாநிலத் தலைமை அமைச்சராக இருந்தபொழுது, மருத்துவக் கல்லூரியில் பரிந்துரை செய்து இடம் வாங்கித் தரவில்லை என்பதற்காக, இவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

தமது கடைசிக்காலத்தில், மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்தார்.

அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனால், தேசாயின் மருமகள், அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

1896, பிப்ரவரி 29 அன்று பிறந்த இவர், 1994-ல் பாரத் ரத்னா விருது பெற்றார். 1995 ஏப்ரல் 10-ம் நாள் தனது 100 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

மொரார்ஜியின் நினைவுநாளையொட்டி தினமணியில், நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி என்ற தலைப்பில், அருச்சுனன் எழுதிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள்.

நன்றி: தினமணி

You might also like