கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகரான இந்தியர்!

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி, 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் கமாண்டராக பணியாற்றியவர்.

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் சாந்தி சேத்தி முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like