– அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல்-19) 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா குறித்து விளக்கமளித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல், தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை.
முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை” எனக் கூறினார்.