‘சமுதாயமும் தனி மனிதனும்’ என்ற புத்தகத்தில் மாமேதை ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் எண்ணங்களின் சாரம்:
“தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.
பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம்.
நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன.
சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது”
மரம் உதவுகிறது நிழல் தந்து..
புல்லாங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து
ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட…
நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!
ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும். நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் அவர் மனசார வாழ்த்துகிறார்போல் போல் அது இருக்கட்டும்… உதட்டால் அல்ல..!
நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி..! முடிந்த மட்டும் உதவுவோம்..! நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும். எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாம் ஒருவருக்கொருவர் எண்ணங்கள் மூலம் இணைந்து இருப்போம். மாற்றம் ஒன்றே நிலையானது.. இந்த நிலை மாறும். இயற்கையைப் போற்றுவோம்.
உலகம் நலம் சிறக்க.. நல்வாழ்த்துகள் அலையை தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருப்போம். மக்கள் மனதில் நம்பிக்கை விதைகளை விதைப்போம்.
மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு திரும்புவதை மனதில் கற்பனை செய்வோம்.
உலக மக்கள் ஆரோக்கியம் செல்வ செழிப்பு நீண்ட ஆயுள் ஆனந்த வாழ்வு தந்ததற்கு பிரபஞ்ச திற்கு நன்றி உணர்வுடன் பிராத்தனை செய்வோம்.
– நன்றி: முகநூல் பதிவு