ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது என அனைத்துக்கும் ஏடிஎம்களை உபயோகிக்கின்றனர்.
குறிப்பாக பணம் எடுக்கும் நேரங்களில் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்ளும். இப்படியான பிரச்சனையை பலரும் எதிர்கொண்டிருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்.
இதுபோன்ற சூழ்நிலையில், பலர் பீதியடைந்து மீண்டும் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயற்சிக்கின்றனர். இங்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வாடிக்கையாளர் தனது வங்கியின் ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும்போது, பணம் சிக்கிக்கொண்டால், அதாவது எடுக்க முடியாமல் போனால் உடனே அருகில் உள்ள கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வங்கி பூட்டப்பட்டிருந்தால் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் மையத்தில் புகார்கள் பதிவு செய்யப்படும். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வங்கிக்கு ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொள்ளும்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் சிக்கிக் கொண்டால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டதற்கான சீட்டை ஏடிஎம்மில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பணம் வராத சமயத்தில் ஏடிஎம் மெஷின் சீட்டை எடுக்காமல் இருந்து வங்கி ஸ்டேட்மென்டை ஆதாரமாக கொடுங்கள். ஏனெனில் அதில் ஏடிஎம் ஐடி, இடம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
அதனைக் கொண்டு வங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும். ரிசர்வ் வங்கி விதிகளின்படி புகார் கொடுக்கப்பட்ட 7 நாட்களுக்கு வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு வைக்கப்படவில்லை என்றால், வங்கியை நேரடியாக அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். 7 நாட்களுக்குள் பணம் திரும்ப வரவில்லை என்றால், அதற்கடுத்த ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் வங்கி வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும்.
நன்றி: முகநூல் பதிவு