புது வகை கொரோனா: 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா, புதுடில்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய வகை கொரோனா வேகமெடுத்துள்ளது.

இதன்காரணமாக இந்த 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும். கொரோனா நோய் கண்டறிதல், சோதனை அதிகரித்தல், தடுப்பூசி முழுமைப்படுத்துதல், மேலும் போதிய மருத்துவ வசதிகள் தயார் படுத்துதல் என மாநில அரசு விரைந்து பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

09.04.2022  11 : 50 A.M

You might also like