“மழையை வரவழைப்பதற்குக்கூட அதற்கென்று கச்சேரிகள் நடைபெறுகின்ற கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மழை வந்ததா? அது கேள்விக்குறி.
ஒருவேளை அங்கே தவிலும் முழங்கியிருந்தால், பரவாயில்லை – மழை வராவிட்டாலும் இடியாவது முழங்கியது என்று எண்ணிக் கொண்டு விடலாம்.
ஆனால், மழையை வரவழைக்கின்ற நேரத்தில் மட்டும் ஏன் தவிலை விட்டுவிட்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
ஒருவேளை மழை வந்தால் ‘பிடிலால் மாத்திரம் வந்தது’ என்று சொல்வதற்காகத் தவிலை விட்டு விட்டார்களோ?!
தவிலும் சேர்ந்து இடித்து அந்த இடிக்குப் பிறகு வருகிற மழைதான் கன மழையாக இருக்கும்..”
– முத்தமிழ் பேரவை விழாவில் மு.கருணாநிதி