புதுவை துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசையின் கணவரான டாக்டர் சௌந்தர ராஜன் சிறுநீரகத் துறையில் நிபுணர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேராசிரியாகவும் இருந்திருக்கிறார்.
பல வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிற இவர் ரஜினிக்கும் சிகிச்சை அளித்திருக்கிறார்.
ரஜினிக்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறப்புச் சிகிச்சை மேற்கொண்ட போது, கூடவே சென்று பத்து நாட்கள் அவரைப் பார்த்துக் கொண்டவர்.
முன்னாள் தமிழக முதல்வரான திருமதி.ஜானகி அம்மாவுக்கும் இவர் சிகிச்சை அளித்திருக்கிறார்.