மறக்க மனம் கூடுதில்லேயே…!

அருமை நிழல்:
*
திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை – கருணாநிதி.

வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அவர்களுடைய குல தெய்வம். சிறுவயதில் குடும்பத்தார் வேண்டிக் கொண்ட போதெல்லாம் மொட்டை அடிக்கப்பட்டிருக்கிறது சிறுவனாக இருந்த கருணாநிதியின் தலை. அதை அவரே கேலியாக ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடகம், திரைத்துறை, அரசியல், ஆட்சி என்று கலைஞரின் வாழ்க்கைத்தடம் மாறிய பிறகு 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வராக நான்காவது முறை பதவியேற்றதும், தான் பிறந்த வீட்டிற்கு வந்து, அங்கு அமர்ந்துவிட்டு, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் தன் கைப்பட இப்படி எழுதியிருக்கிறார்.

“நான் பிறந்த மண்ணில் நான் பிறந்த இல்லத்திற்கு எத்தனை முறை வந்தால் தான் என்ன; தெவிட்டுவதில்லையே. எத்தனையோ பசுமையான நினைவுகள். நான் பிறந்த மண்ணுக்கு எப்படித் தான் நன்றி சொல்லப் போகிறேன்?”

You might also like