நானும் விஜய் ரசிகர் தான்…!

– வைரலாகும் ஷாருக்கான் பதிவு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் பீஸ்ட் படத்தின் படத்தின் டிரைலர் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘பீஸ்ட் ‘படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இயக்குனர் அட்லியை போல நானும் விஜய் ரசிகர் தான். ‘பீஸ்ட்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.

ஷாருக்கானின் இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

You might also like