– உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி.
இந்த உரையின்போது, “2-ம் உலகப் போருக்கு பிறகு உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கொடூர போர் குற்றத்தைப் புரிந்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகளில் தங்கியிருந்த மக்கள் கொல்லப்பட்டதோடு, கார்களில் சென்றவர்கள் பீரங்கிகளால் காரோடு நசுக்கப்பட்டு பச்சைப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
“ரஷ்ய ராணுவத்திற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரஷ்யாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ஐ.நா. அவையை இழுத்தி மூடிவிடலாம்” என்று ஆவேசமாகப் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனின் புச்சா நகரில் சிதறிக் கிடந்த மனித சடலங்கள் தொடர்பாக ரஷ்ய ராணுவம் மீது தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
06.04.2022 12 : 30 P.M