மதப் பிரச்சார அமைப்புக்குத் தடை!

– பயங்கரவாத தீர்ப்பாயம் உத்தரவு

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மீது, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்ததும், அவர் 2016-ல் தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவுக்கு தப்பிச் சென்றார்.

உடனே அவருடைய அமைப்புக்கு தடை விதித்து, கடந்தாண்டு நவம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பயங்கரவாதத் தடுப்புச் சட்ட தீர்ப்பாயம், ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு தடை விதித்து, மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணை செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

01.04.2022 12 : 30 P.M

You might also like