படித்த முட்டாள்கள்; பாமர ஞானவான்கள்!

பரண்:

“எனது எழுத்துக்கள் எந்தத் தனிமனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை; அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும்.

ஒரு பத்திரிகையில் நான் எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் எனது தனிப்பட்ட சொந்த விஷயமாகும். இந்த எனது சுதந்திரத்தைக் குறித்து என்ன அபவாதங்கள்ல பேசினாலும், அவற்றுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை; என்னைக் கேள்வி கேட்கக் கூடிய தகுதியிலும் எவருமில்லை.

நமது வாழ்க்கையில் படித்த முட்டாள்களும், பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறது.

கிராமம் அழகிய இயற்கைச் சூழலில் தானும் ஓர் அழகு, இயற்கையின் வதனத்தில் தான் ஒரு சிந்தூரத் திலகம் என்றெல்லாம் தெரியாமல் உழைப்பை யோகமாய்ப் பயின்று வாழ்கிறது”

– ஜெயகாந்தன்
24.04.1994 அன்று வெளியிடப்பட்ட ஜெயகாந்தன் மணிவிழா மலரிலிருந்து…

You might also like