தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: மக்கள் பாதிப்பு!

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (28.03.2022) காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

சென்னையில் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆட்டோக்களும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.

இதேபோல், வங்கிகள் உள்ளிட்ட பொத்துறை நிறுவங்களைச் சார்ந்த ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுதல் பல்வேறு சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பேருந்து சேவைகள் பாதிப்பால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

You might also like