போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் – புதின்!

– அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்த உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் ரஷியாவிடம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், அமைதிக்காக உக்ரைன் அதன் எந்த ஒரு பிரதேசத்தையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஷிய பொதுப் படைகளின் துணைத் தலைவர் கர்னல் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய் நேற்று பேசுகையில், “ரஷியப் படைகள் இப்போது முக்கிய இலக்காக டான்பாஸ் பகுதியின் விடுதலையில் கவனம் செலுத்தும்” என்று கூறினார்.

இதன்மூலம், உக்ரைனின் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ரஷியா பின்வாங்க முடிவு செய்து இருக்கலாம் என்பது தெரிகிறது.

இதனை குறிப்பிட்டு நேற்று உக்ரைன் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய அதிபர் ஜெலென்ஸ்கி, “ரஷியப் படைகள் ஆயிரக்கணக்கான துருப்புக்களை இழந்துள்ளன, ஆனால் அவர்களால் இன்னும் கீவ் அல்லது கார்கிவ் நகரங்களை கைப்பற்ற முடியவில்லை” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

முன்னதாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியின் ஒரு பகுதியை ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள், 2014 முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தற்போது முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரம் உட்பட, உக்ரைனிடம் இருந்து பல பகுதிகளை கைப்பற்ற ரஷிய படைகள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like