அரசு, தனியார் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்!

 – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் தொழில்துறை வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,

“வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் திட்டங்களை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யவும் மறுசீரமைக்கவும் வேண்டும்.

நமது விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு லாபகரமான விலையைப் பெறுவதற்கும், அவர்களின் குடும்ப வருமானம் கெளரவமான நிலைக்கு உயர்வதற்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

வேளாண் கழிவை பணமாக்குதல், காற்று மாசு உள்ளிட்ட சாமானியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதுமையான வணிக மாதிரிகளை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் இதற்கு முன்னில்லாத வகையில் இந்தியா மாற்றங்களை சந்தித்து வருகிறது.

வெளிப்படைத்தன்மை மற்றும் சேவையை எளிதாக்கவும், ஜிஎஸ்டி மற்றும் தொழிலாளர் விதிகளை உறுதி செய்வதிலும் தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சிறந்த மற்றும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் நமது நாடு அளிக்கிறது.

விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வர, அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுவதுடன், சிறந்த மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவதும் முக்கிமானது.

மலிவு விலையில் வீடுகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை நகர்ப்புற மக்கள் பெறுவதை நமது கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

15.03.2022  12 : 30 P.M

You might also like