சுமார் 47 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பார்த்தவர்கள் அப்படத்தில் வரும் காட்சிகள் இன்றும் மறக்க முடியாதவை என்றே சொல்வார்கள்.
ஜெயசுதா போடும் புதிர், பைரவிவாக வரும் ஸ்ரீவித்யாவை மையப்படுத்திய படத்தில் அவர் பாடும் பாடல்கள், நாகேஷ் அவர்கள் சிங்கிளா இருந்து போடும் டபுள்ஸ் வேடம், கண்ணதாசன் ஒரு சீனில் வந்து போகும் குசும்பு காட்சி,
படம் முழுக்க ஒருவித முரட்டு இளைஞனாக, வாலிப முறுக்கு மிடுக்கோடு வரும் கமல், பரிதவிப்போடு அலையும் மேஜர், கதைக்கு கிளைமாக்ஸ்க்கு சற்றுமுன் ரஜினி எண்ட்ரி என அத்தனையும் சுவாரஸ்யமானவை.
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அறிமுகமாகும் போது பொருத்தமாக ராகங்களின் பெயரைப் போடுவது படத்துக்கு புதுமை.
பாடல்கள் அனைத்துமே சிறப்பு.
இன்றும் பண்பலை வரிசையிலும், தொலைக்காட்சி இசைச் சேனல்களிலும் கேட்டாலும், பார்த்தாலும் ஈர்ப்பு ஏற்படுகிறது.
காயல் ஷேக் முகமது பாடிய “கை கொட்டி சிரிப்பார்கள்” பாடல் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
துணிச்சலாக செய்கிறேன் என்று கொஞ்சம் வில்லங்கமான கதையை இயக்கிய கே. பி. அவர்கள் சற்று விமர்சனத்துக்கு உள்ளனார். இருந்தாலும் படம் வெற்றி.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் பங்கேற்றார்.
ரஜினியின் அடுத்த படமான ‘மூன்று முடிச்சு’ வந்தபிறகே அவரா இவர் என நினைக்க வைத்தது இப்படத்தில் அவர் வந்து போனது.
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15.03.2022 5 : 30 P.M