“வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை.
உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே.”
- எஸ்.ராமகிருஷ்ணன்