பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை?

இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்!

ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணையின் பாகங்களைப் பறிமுதல் செய்து பாகிஸ்தான் சோதனை செய்தது.

முன்கூட்டியே சரியான தகவல் எதுவும் கொடுக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் 9-ம் தேதி வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணியின் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியது.

இது பற்றி விசாரிக்க உயர்மட்ட நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படாதது நிம்மதியை அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.03.2022  12 : 30 P.M

You might also like