தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரியா?

– பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் ரத்தினம், பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில்,

“காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் கற்களையும் மண்ணையும் வெட்டி எடுக்க குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எடமச்சி காப்பு காடுகள், தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், பழங்கால நினைவு சின்னங்களும் இங்குள்ளன. எனவே, இப்பகுதியில் குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, பசுமைத் தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

“எடமச்சி காப்பு காடுகள், தமிழக அரசால் பாதுக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மேல் முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்து கோப்புகளையும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 28-ல் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது.

10.03.2022 12 : 30 P.M

You might also like