ஸ்பெயின் நாட்டின் காடலினா பகுதியைச் சேர்ந்த எஸ்தர் ஒரு உறுதிமொழி எடுத்தார். தன் வீட்டில் ஒரு குண்டூசியைக் கூட வீணாக்கக் கூடாது என்று.
அதைத் தன் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்.
மினிமலிச வாழ்க்கை வாழ வேண்டும், அதே போல திரும்பத் திரும்பப் பொருட்களைக் கடைகளில் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்துச் செயல்பட்டார்.
வீணான துணிகளைத் துடைத்தல் போன்ற காரியத்துக்கும் காகிதங்களை வைத்து craft செய்தும், தங்கள் வீட்டில் தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்தும் zero waste ஐ உருவாக்கினார்கள்.
குழந்தைகளை இயற்கை கொஞ்சும் இடங்களுக்கு அழைத்துச் சென்று ப்ளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்பதைப் புரிய வைத்தார்.
கிஃப்ட் காகிதங்களில் பரிசுகளைச் சுற்றிக் கட்டாமல் துணிகளைக் கொண்டு போர்த்தினார்.
எஸ்தர் agricultural engineering ல் Ph.D. படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் நிலத்துக்கு எந்த ஒரு விஷத்தையும் நாம் பரிசளிக்கக் கூடாது என்கிறார் எஸ்தர்.
நாமும் அதைப் பின்பற்றுவோம்.
நன்றி: பா.ஜீவசுந்தரி முகநூல் பதிவு