“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன் இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை. அது தான் மகத்தான சவால்”
சைபீரியாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போவதற்குச் சற்று முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி தன் சதோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.
– கோணங்கி ஆசிரியராக இருந்து வெளிக்கொண்டு வந்த தாஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ் (1990, டிசம்பர்)