இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியும், சுதந்திர இந்தியாவின்
4-வது பிரதமருமான மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேசத்தலைவர்.
1896 பிப்ரவரி 29-ல் குஜராத்தில் பிறந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
1952-ல் பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சரானார்.
அன்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கொள்கை சோசியலிச பாணி பொருளாதார கொள்கை. நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளிலும், அதிகாரிகள் மட்டத்திலும், இந்த கொள்கைக்கு பலத்த ஆதரவு இருந்தது.
ஆனால் ஏழை மக்களும் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லாதவர்களுக்கு வாழ்க்கையை வாழ அடிப்படை வசதி கிடைக்கும் வரை சோசியலிசம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று மொரார்ஜி நம்பினார். மதுவிலக்கு கொள்கைகளை தீவிரமாக முன்மொழிந்தார்.
1958-ல் இந்தியாவின் நிதியமைச்சரானார். நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நிதி ஒழுங்கு முறையை அமுல்படுத்தினார். சமூகத்தின் சிறப்புரிமை பெற்ற பிரிவினரின் ஆடம்பர வாழ்க்கை முறைக்குத் தடை விதித்தார்.
1963-ல் காமராஜர் திட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நேருவிற்கு பிறகு பிரதமராகும் வாய்ப்பு பல முறை இவருக்கு மறுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சிண்டிக்கேட் தலைவர்கள் இவரின் வளர்ச்சியை விரும்பவில்லை. இந்திரா காந்தியை பிரமதராக்கினார்கள்.
இந்திராவின் அமைச்சரவையில் துணை பிரதமராகவும், நிதியமைச்சராகவும்
பணியாற்றினார். தனியர் வங்கிகளை அரசுடைமையாக்கும் திட்டத்தை எதிர்த்தார்.
இந்திரா காந்தியுடன் முரண்பட்டதால், பதவி விலகினார். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளந்தது.
காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற முதுபெரும் தலைவர்களின் அணியான சிண்டிக்கேட் காங்கிரஸ் கட்சியில் மொரார்ஜி இணைந்தார். சோசியலிசத்தை எதிர்த்ததால் பிற்போக்குவாதி என்றும், அமெரிக்க கைக்கூலி என்றும் இந்திராவின் ஆதரவாளர்களால் இகழப்பட்டார் மொரார்ஜி.
1975-ல் இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன், பதவி விலாகாமல் தவிர்க்க, அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் இந்திரா. இரண்டு ஆண்டுகள் நாடெங்கும் கொடும் அடக்குமுறை தாண்டவமாடியது.
மொரார்ஜி, ஜெயப்பிரக்காஷ் நாராயண் உள்பட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும்
கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் கடுமையான அடக்குமுறைகள் நடந்தன.
1977-ல் அவசர சட்டம் ரத்தான பிறகு நடந்த பொது தேர்தலில், ஜனதா கட்சி
பெரும் வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய பிரதமராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
இரண்டு ஆண்டுகளே அவரின் ஆட்சி நீடித்தது.
1980இல் இந்திரா மீண்டும் பிரதமரானார். அத்துடன் மொராஜியின் 50 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெற்றது.
சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும், நேர்மையும், தூய்மையும் கொண்டவரான
மொரார்ஜி தேசாய், தனது நூறாவது வயதில் மறைந்த தினம் – 1995, ஏப்ரல் 10.
26.02.2022 4 : 30 P.M