சாதி என்பது குரூரமான யதார்த்தம்!

நூல் வாசிப்பு:

சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார்.

நாட்டுப்புறவியல் மற்றும் சமூகவியலில் தேர்ச்சிபெற்ற பேரறிஞரான தொ.பரமசிவனின் நேர்காணல் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரையும் சென்றடைந்தது.

சமூகம் சார்ந்த நாட்டார் வழக்குகள், வழிபடும் சாமிகள் பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்பும் விரிவான நேர்காணல் இந்த நூலில் அடங்கி இருப்பது தனிச் சிறப்பு.

மணாவின் இந்த நேர்காணலோடு பல்வெறு சமயங்களில் தொ.பரமசிவனை எடுத்த பேட்டிகளும், அவருடைய கட்டுரைகளும் இதில் அடங்கியிருக்கின்றன.

கூடவே, அவர் மறைந்தபோது நண்பர் மு.ராமசாமி எழுதிய ஒரு விரிவான இரங்கல் பதிவும், மணாவின் இரங்கல் பதிவும் இதில் பதிவாகி இருக்கின்றன.

இந்த நூலை டிஸ்கவரி புக் பேலஸ் கச்சிதமான முறையில் பதிப்பித்து வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறது. சமூக உணர்வு கொண்டவர்களுக்கு இது ஒரு முக்கியமான, சிக்கனமான ஒரு பதிவாக இருக்கும்.

****

சாதி என்பது குரூரமான யதார்த்தம்!
தொ.பரமசிவனின் நேர்காணல்களும் கட்டுரைகளும்.
தொகுப்பாசிரியர் – மணா

டிஸ்கவரி புக் பேலஸ்

ஸ்டால் எண் : 267, 268

விலை: ரூ. 80

You might also like