துயர் தீர்க்க வழியுண்டோ?

நினைவில் நிற்கும் வரிகள் :

***

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

(நெஞ்சு பொறுக்குதில்லையே)

அஞ்சியஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென்பார் – இந்த
மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டிலென்பார் – மிகத்
துயர்படுவார் எண்ணி பயப்படுவார்

(நெஞ்சு பொறுக்குதில்லையே)

கஞ்சி குடிப்பதற்கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே – நிதம்
பரிதவித்து உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்களைத் தீர்க்க ஓர் வழியுமில்லையே…

(நெஞ்சு பொறுக்குதில்லையே)

– மகாகவி பாரதியின் இந்த வரிகள், 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படத்தில், சி.எஸ்.ஜெயராமன் குரலில் இடம்பெற்றது.

You might also like