– 2009-ல் நடந்த விழாவில் இயற்கை மீது அக்கறை கொண்ட எஸ்.பி.பி.யின் பேச்சு
சுனாமி பாதிப்பிற்கான நிவாரண நிதி திரட்டுவதற்காக சென்னை நாரத கான சபாவில் லக்ஷ்மன் சுருதியின் இசைவிழா. ஏகப்பட்ட பாடகர்கள். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து கச்சேரி.
தலைமுடி கறுப்பு; தாடி வெள்ளை என்று ரஜினி பாணியில் மேடைக்கு வந்திருந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘மறுபடியும்’ படப்பாடலை பாடிவிட்டுக் கொஞ்சம் பேசினார்.
“சுனாமி அலையடித்துப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. ஆனா நாம கொஞ்சமாவது யோசிக்கணும். இயற்கையை தாம் கௌரவிக்கலைன்னா அது தம்மைக் கௌரவிக்காது.
காற்று மண்டலத்தில் எவ்வளவு அசுத்தத்தை ஏற்படுத்துறோம்? போகும்போதே துப்புகிறோம். சாலையோரத்தில் யூரின் போகிறோம். ஒவ்வொருவரும் இப்படிச் செஞ்சா என்ன ஆகும்?
நாம சரியான உலகை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப் போகிறோமா? இதுதான் நம் முன்னிருக்கிற கேள்வி. சுனாமி வருவதற்குக் காரணம் நாம்தான்.
இயற்கையை நாம் எந்த அளவுக்கெல்லாம் கஷ்டப்படுத்துகிறோம்? மேல்நாட்டில் இருக்கிற ஒழுங்கும். சுத்தமும் ஏன் இங்கு இல்லை?
எவ்வளவு இடங்களில் பாலிதீன் பேப்பர்களை வாரி இறைக்கிறோம்? நமக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கடவுள். அதை நாம் உணர வேண்டும்” என்று சின்னப் பிரசங்கம் செய்து முடித்தபோது கைதட்டலால் நிறைந்தது அரங்கம்.
அதே ஜோரில் எஸ்.பி.பி. பாடிய பாட்டு ‘ஜெய்ஹிந்த்’.
10.02.2022 12 : 30 P.M