நல்லா சொல்றாங்கய்யா டீடெய்ல்!

– வடிவேலு பாணியில் மத்திய அரசு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசு பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அப்போது, “கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு துறைகளில் 8,72,243 காலி பணியிடங்கள் உள்ளன.

மத்திய பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி, ரெயில்வே தேர்வு வாரியம் ஆகியவை கடந்த 2018-19 மற்றும் 2020-2021 நிதியாண்டுகளில் 2,65,468 ஊழியர்களைத் தேர்வு செய்துள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி.) 485 காலி பணியிடங்கள் உள்ளன. காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக நடந்து வருகிறது” எனக் கூறினார்.

You might also like