உலக சுகாதார நிறுவனம் கிளப்பும் அடுத்த வைரஸ் பீதி!

கொரோனாத் தொற்று பரவத் துவங்கியதிலிருந்து கிளம்பும் பீதிகளுக்குக் குறைச்சல் இல்லை.

சீனா தன் பங்கிற்கு மறுபடியும் புது வைரஸ் குறித்துப் பீதியைக் கிளப்ப, உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவும் புதிய வைரஸ் குறித்து இப்படிச் சொல்லியிருக்கிறார்.

‘’தற்போது பரவியுள்ள ஒமிக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இதையடுத்து இன்னொரு வைரஸ் தொற்று பரவ இருக்கிறது. அது சாதாரணமானதாக இருக்காது. வேகமாகப் பரவும். கூடவே அதிக அளவுக்கு உயிர்களைப் பலி வாங்கவும் செய்யும்’’ என்று சொல்லியிருப்பவர் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்தும் தயாராகிப் பரிசோதனை அளவில் இருக்கிறது. ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த பீதிகள் கிளப்பிவிடப்படுகின்றன.

இதனால் கவலையடையப் போவது பொதுமக்கள் என்றாலும், பலன் பெறப் போவது என்னவோ, விதவிதமான மருந்துகளைத் தயாரிக்கும் சர்வதேச மருந்துக் கம்பெனிகள் தான்.

– லியோ

You might also like