பொருளாதாரச் சமநிலையை உருவாக்கும் பட்ஜெட் வேண்டும்!

– ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வேண்டுகோள்.

வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு பட்ஜெட்டின் குறிக்கோளும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக இருக்கும். இந்த பட்ஜெட்டும் அவ்வாறே இருக்கும். அதோடு இந்த பட்ஜெட், பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஏற்ப இருக்க வேண்டும்.

உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என, சமீபத்திய உலக சமத்துவமின்மை அறிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய பரந்துபட்ட சமத்துவமின்மை, தார்மீக ரீதியாக தவறானது.

மேலும் அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது நம் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளையும் சிதைக்கும்.

இந்தாண்டு பட்ஜெட்டின் கருப்பொருளாக இருக்க வேண்டியது – வேலைவாய்ப்பு. தீவிர வேலைவாய்ப்பு நமக்கு தேவைப்படுகிறது. வேலைவாய்ப்பை வழங்க வளர்ச்சி தேவைப்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல” எனக் கூறியுள்ளார்

You might also like