உங்களால் இந்த உலகத்தை மாற்ற முடியுமா?

ஷெரில் ஷேண்ட்பர்க்-கின் நம்பிக்கை மொழிகள்

அமெரிக்காவில் பிறந்த ஷெரில் ஷேண்ட்பர்க், உலகையே கலக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஓஓ), லீனின் இணையதளத்தின் நிறுவனர்.

அவரது நம்பிக்கை மொழிகள்…!

உங்கள் இலக்கை அடைய சொந்த திறமைமீது நம்பிக்கை வைப்பதும் நம்புவதும் மிகவும் தேவையானதாக இருக்கும்.

நான் என்ன சொல்கிறேனோ, அதற்காக உண்மையில் உழைக்கிறேன். என்னிடம் நீண்டதூரக் கனவு ஒன்றிருக்கிறது. அதற்கான திறமையுடன் பணிபுரிய விரும்புகிறேன்.

ஆர்வத்தையும் பங்களிப்பையும் சேர்ப்பதுதான் ஆகச்சிறந்த ஆடம்பரமாக இருக்கும். அதுதான் மகிழ்ச்சிக்கான மிகத் தெளிவான பாதையும்கூட.

எல்லா பெண்களும், குறிப்பாக மூத்தவர்கள் வேலையில் மிகக் கடுமையாக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆண்கள்தான் பெண்களைவிட வேலையில் கடுமையாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், பெண்கள் கடுமையாக இருப்பார்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் ஆண்கள் பிஸியாக இருக்கிறீர்கள். அதுதான் பிரச்சனை.

துயரம் நேர்ந்தால், அதுவொரு வாய்ப்பைத் தருகிறது என்று நான் நினைக்கிறேன். உங்கள் இதயத்தில் நுரையீரலின் வெற்றிடத்தை நிர்ப்புங்கள். உங்கள் சிந்திக்கும் திறனை, சுவாசத்தைச் சுருக்குங்கள். அல்லது அர்த்தம் தேடுவதில் முழுமூச்சாக இறங்குங்கள்.

எனக்கு உற்சாகம் அளித்தவர்கள், முன்னேற வழிகாட்டியவர்களுக்கு உண்மையில், நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். தன்னிச்சையாக யாரும் வளர்ந்துவிடமுடியாது.

சில காரியங்கள் மோசமாகும் என்பது தெரிந்தால், நிறுத்திவிடாதீர்கள். அதை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

ராக்கெட்டில் உங்களுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டால், எந்த சீட் என்று கேட்காதீர்கள். அப்படியே அதை பெற்றுக்கொள்ளுங்கள்.

வேலைக்காக உங்களை முழுமையாக கொடுத்துவிடுங்கள். திங்கள் முதல் வெள்ளி வரைதான் வேலை என்பதில்லை மற்ற நேரங்களிலும் வேலை தொடர்கிறது. அதுவும் வேலைதான். அதுவும் பர்சனல்தான்.

தலைமை என்பது கொடுமைப்படுத்துவது அல்ல. கடுமையாக நடந்துகொள்வதல்ல.  நல்லவற்றுக்காக உங்கள் குரலை எழுப்புவதற்கான எதிர்பார்ப்புதான் தலைமை. அப்போது இந்த உலகை மிகச்சிறந்த இடமாக உங்களால் மாற்றமுடியும்.

நீங்கள் மிகவும் மதிப்புமிக்கவராக இருக்கும்போது. உங்களைச் சுற்றியுள்ளவர்களும் நிறையவே செயல்பட்டு பணிகளை முடிப்பார்கள்.

உயர் பொறுப்பு உள்பட எல்லா நிலைகளிலும் பெண்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். மாற்றத்திற்கான உரையாடலை வடிவமைக்க, பெண்களின் குரலும் கவனமும் தேவைப்படுகின்றன. அவர்களுடைய குரல்கள் கண்டுகொள்ளாமல் விடப்படக்கூடாது. அலட்சியம் செய்துவிடக்கூடாது.

யார் எடுத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கே தலைமைப் பொறுப்பு உரியது.

நம்பிக்கையை உணருங்கள் அல்லது நம்பிக்கையோடு இருப்பது மாதிரி நடியுங்கள். அது உங்கள் வாய்ப்புகளை அடைய தேவையாக இருக்கும்.

வெற்றி என்பது நம்மால் முடிந்த சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதும், அவற்றை ஏற்றுக்கொள்வதும்.

கற்றுக்கொள்வதற்கான திறன்தான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவருக்கான மிக முக்கியமான பண்பு.

எதிர்மறையாக இருக்கும் அறியாமையைவிட தலைகீழாக இருக்கும் வலிமிகுந்த அறிவு மிக உயர்ந்தது.

நீங்கள் எல்லோரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தால், நீங்கள் போதுமான வளர்ச்சியை அடையவே முடியாது.

தான்யா

You might also like