தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

– மதுரை உயர்நீதிமன்றக் கிளை

யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான்.

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற காணொலிகள் இடம்பெறும் நிலையில் இதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளைத் தடுக்க தடை செய்யலாமே? வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகள் வந்தால் அதைத் தடை செய்யுங்கள்.

தேவையற்ற பதிவுகளைத் தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க கோரி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

You might also like