மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்புப் பதிவு : 2
*
‘நான் பலமுறை அறிஞர் அண்ணா அவர்களிடம் பேசியதுண்டு.
அய்யா (பெரியார்) அவர்களைப் பற்றி அவர் சொல்லும் போதெல்லாம் ஒரே ஒரு எச்சரிக்கையை, நான் கவலைப்படும் நேரத்தில் அவர் சொல்வதுண்டு.
“நீ அய்யா அவர்களைப் பார். அவருடைய துணிவை நீ பெற வேண்டும். நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் சொல். அதனால் வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள நீ தயாராகிவிடு. நீ மனிதனாகி விடுவாய்”- என்பது தான் அறிஞர் அண்ணா எனக்குச் சொல்லிக்கொடுத்த பாடம்.
அந்த வகையில் நான் செயல்படும் போது, எனக்கு எதிர்ப்பு வரும் போது, எனக்குத் துன்பம் வரும்போது, தொல்லை வரும்போது, நான் பலமுறை அய்யா அவர்களை நினைத்ததுண்டு. நான் அதை ஏற்பதிலே கூடத் தவறில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மேடையிலே கூற விரும்புகிறேன்.
காரணம்- மனிதன் துணிந்து வாழ்ந்து தீர வேண்டிய காலமிது.”
பெரியாரின் 86 ஆவது பிறந்த நாள் விழாவின் போது எம்.ஜி.ஆர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி : மல்லிகா பிரபாகரன் தொகுத்து வெளியிட்டிருக்கும் “டாக்டர் எம்.ஜி.ஆரின் இலட்சிய முழக்கங்கள்” என்ற நூல் – 188 பக்கங்கள்- விலை ரூ 250 ; டாக்டர் எம்.ஜி.ஆர் மையம்,
தர்மபுரி . செல்: 95435 78838