பொங்கலைத் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டிய திராவிட இயக்கங்கள்!

– ஆய்வாளர் தொ.பரமசிவன்

“பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம்.

திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அந்தச் சமூகம் புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில் ஓய்வெடுக்கிற மாதிரி.

ஆனால் இளைப்பாறுவதையே முழு நேரத் தொழிலாக நமது ஊடகங்கள் ஆக்கிவிட்டன. ஒவ்வொரு திருவிழாவும், அந்த மக்களின் உற்பத்தி சார்ந்த வெளிப்பாடு.

அறுவடை முடிந்து கோடைக்காலத்தில் நமது திருவிழாக்கள் வரும். இப்போது நுகர்வுக் கலாச்சாரத்திற்குத் தீனி போடக்கூடிய விஷயமாகிவிட்டன புதுப்புதுத் திருவிழாக்கள்.
சுயமான அறிவு உற்பத்தியும், சுயமான பொருள் உற்பத்தியும் இருக்கிற இடத்தில்தான் அதற்கென்று தனிக்கலாச்சாரமும் இருக்கும்.

அதை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்ற காலத்தில் பொங்கலைத் தமிழர்களின் திருநாளாக அடையாளங் காட்டினார்கள். இன்றைக்கு ஹோலிப்பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதே இயக்கத் தலைவர்கள்.

பொது நலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சியைக் கைவிட்டு விடக்கூடாது. அதுபோல மான, அவமானம் பார்க்கக்கூடாது.

அப்படி எந்த எதிர்ப்பையும் மீறிச் செயல்பட்டவர் பெரியார். அவரிடம் இருந்த பொதுநலம் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை”

2002-ல் எடுக்கப்பட்ட விரிவான நேர்காணல் பதிவிலிருந்து ஒரு பகுதி.

– மணா-வின் ‘ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’- தொகுப்பு நூல்

You might also like