காமிராவுக்குப் பின்னால் மக்கள் திலகம்!

அருமை நிழல் :  

*

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல புகைப்படக் கலைஞர்களுடன் பழக்கம் உண்டு என்றாலும், தமிழக முதல்வராக அவர் கோட்டையில் அமர்ந்தபோது, முதல் படம் எடுக்க உரிமையோடு அவரால் அழைக்கப்பட்டவர் மூத்த புகைப்படக் கலைஞரான ஆர்.என்.நாகராஜராவ்.

‘நாடோடி மன்னன்’ படக் காலத்திலிருந்தே பல படங்களுக்காக அவரைப் பல கோணங்களில் படம் பிடித்தவர்.

இரட்டை இலையைக் குறிக்கும் விதத்தில் எம்.ஜி.ஆர். இரண்டு விரிலை விரித்தபடி காட்டும் பிரபலமான புகைப்படம் இவர் எடுத்தது தான்.

பல படங்கள் இவர் எடுத்து மிகவும் பேசப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக காமிராவுக்கு முன் நிற்கும் எம்.ஜி.ஆர் காமிராக்குப் பின்னால் இருக்கும் அபூர்வப் படம்.

நன்றி:  மேஜர்தாசன் எழுதிய ‘எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகம்.

11.01.2022 10 : 50 A.M

You might also like