சொல்லாடலில் வசமாகும் அரசியல்!

இன்றைய வாசிப்பு:

இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் ‘ஒன்றியம்’ என்பது தாராளமாகப் புழங்குகிறது.

அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு பொருத்திப் பொருள்கொள்ள வேண்டும். ஆங்கிலச் சொல்லுக்கு அரசமைப்பின் பின்னணியில் பொருள் தேட வேண்டும்.

அரசமைப்புக்கோ ஐரோப்பிய முன்மாதிரிகளில் பொருள் அறிய வேண்டும்.

தத்துவவியலர் தெரிதா சொல்வதுபோல், சொல்லின் பொருள் எந்தக் கோட்டிலும் நிலைகொள்வதில்லை.

‘ஒன்றியம்’ முறையான சொல்லாவது அது அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பில் இருப்பதால் மட்டுமே அல்ல. அது மாற்றுச் சொல்லாடலின் மையம்.

புதுச் சொல்லாடல்கள்தானே அரசியல் மாற்றத்தின் ஆரம்பமும் அடையாளமும்!

-தங்க ஜெயராமன்.

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்

You might also like