சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள், குறைவான பாதிப்பு இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், சென்னையில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் முறையாக எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் பின்பற்றாததே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.