மாநில அளவில் சிறுபான்மையினர் யார்?

– மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்ட மதத்தினரை சிறுபான்மையினராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “லடாக், மிசோரம், லட்சத்தீவு, காஷ்மீர், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜுடாயிஸம், பாஹாயிஸம் மற்றும் ஹிந்து மதங்களை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

ஆனால் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களை சிறுபான்மையினராக அரசு அறிவிக்க வேண்டும்.

மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You might also like