ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை ‘மைலார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைக்கு (1982) கே.பி.என்.சிங் தலைமை நீதிபதியாக (பீகார் மாநிலத்தவர்) இருந்தார். அதற்கு முன் எம்.எம்.இஸ்மாயில் வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாறுதல் ஆகி விட்டதால், அவர் அதை ஏற்காமல் கண்டித்து அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
சிலகாலம் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தார். அப்போது இதே சர்ச்சையில் ‘சார்’ என்று அழைக்கலாம் என்று ஒரு சூழல் வந்தபோது பி.எச்.பாண்டியன் அன்றைய சட்டப் பேரவையின் துணைத் தலைவராக இருந்தார்.
அன்றைக்கு சாமிக்கண்ணு என்ற நீதிபதியிடம் நான் வாதாடும் பொழுது இதே கருத்தை சொல்லி, ‘சார்’ என்று அழையுங்கள் என்று அவரே சொன்ன போது, நான் ‘சார்’ என்று நீதிபதி சாமிகண்ணுவை அழைத்ததுண்டு.
இதெல்லாம் கடந்த கால சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இன்றைக்கு ஒடிசா மாநில தலைமை நீதிபதி தன்னை ‘மைலார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் கடந்து வந்து, எத்தனையோ செய்திகளை பார்த்த மனிதர்களுக்கு பெரிதாக தெரியலாம். ஏற்கனவே ஒடிசா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காடி கிருஷ்ண மிஸ்ரா ‘சார் என்று’ அழைக்கலாம் என்று சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.
இதுபோல பல நீதிமன்றங்கள் இதுபோன்ற சர்ச்சை வந்தபொழுது நீதிபதிகளை ‘சார்’ என்று அழைக்கலாம் என்று சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.
உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்தான விவாதங்கள் நடந்துள்ளன. இது புதிதல்ல! சென்னை உயர்நீதிமன்றம் கூறிய இரண்டு கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்